விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை நிகழ்வுகள் இனிதே தொடக்கம்!
Aug 24, 2026, 09:40 IST
சபாநாயகர் JCD பிரபாகர் தலைமையில் இன்றைய தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கின. இன்றைய அமர்வில் நகராட்சி நிர்வாகம், பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரான ஜோசப் விஜய், அமைச்சர்கள் ராஜ்மோகன், விஸ்வநாதன் ஆகியோர் பதிலளித்துப் புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.சட்டப்பேரவையில் விவாதிக்கப்படும் பல்வேறு முக்கிய துறை சார்ந்த அறிவிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது