செ.1 முதல் திருவண்ணாமலையைத் தொடர்ந்து அழகர் கோயிலிலும் செல்போனுக்குத் தடை - கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

 

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தலங்களில் ஒன்றான மதுரை கள்ளழகர் திருக்கோயிலில், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அழகர்கோவிலில் வரும் செப்டம்பர் 1, 2026 முதல் கோயிலுக்குள் கைபேசி கொண்டு செல்ல முழுமையான தடை அமலுக்கு வருகிறது. கோயிலுக்குள் பக்தர்கள் ரீல்ஸ் மற்றும் செல்பி வீடியோ எடுப்பது தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தடுக்கும் பொருட்டே இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக வளாகத்திலேயே கைபேசி பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ரூ. 5 கட்டணம் செலுத்திவிட்டுத் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு, சுவாமி தரிசனம் முடிந்த பிறகு பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.