ஏன் காய்கறி சமைக்கல... கேட்ட கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி... பரபரப்பு வாக்குமூலம்!

 

 

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், இரவு உணவு தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில் முன்னாள் ராணுவ வீரர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

allowfullscreen

அகமதாபாத்தின் நரோடா பகுதியில் வசித்து வந்தவர் திலீப் குமார் கராடி (39). முன்னாள் ராணுவ வீரரான இவர், 2022-ம் ஆண்டு ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு குஜராத் கனிம வளர்ச்சிக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி நிர்மலா கராடி (34). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமையல் விவகாரத்தில் வாக்குவாதம்

கடந்த வியாழக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த திலீப், தான் கேட்ட பீர்க்கங்காயை ஏன் சமைக்கவில்லை என்று மனைவியிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே குடும்பம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இந்த விவகாரத்திலும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

அப்போது நிர்மலா சமையலறையில் இருந்த கத்தியால் திலீப்பின் நெஞ்சுப் பகுதியில் குத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து தலைமறைவான நிர்மலாவை போலீசார் தேடி, சிசிடிவி காட்சிகள் மற்றும் உள்ளூர் தகவல்களின் அடிப்படையில் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.