அதிமுகவிலிருந்து சென்ற எம்.எல்.ஏ.-க்களுக்கு ரூ.35 கோடி வழங்கப்பட்டதாக தவெக மீது பரபரப்பு குற்றச்சாட்டு!
பொள்ளாச்சியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆட்சியைப் பாதுகாப்பதற்காகக் கட்சி மாறிய அதிமுக எம்.எல்.ஏ.-க்களுக்குப் பெருமளவில் பணம் கைமாறியதாகத் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்லையை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், ஆட்சியைத் தக்கவைப்பதற்காகக் கட்சி மாறிய குறிப்பிட்ட சில அதிமுக எம்.எல்.ஏ.-க்களுக்குத் தலா ரூ.35 கோடி வழங்கப்பட்டதாகக் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
கட்சி மாறிய அந்த எம்.எல்.ஏ.-க்கள் பணம் பெற்றுக் கொண்டு தங்களது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாகவும், அதன் மூலமாகவே அப்போதைய ஆட்சியைத் தக்கவைக்க முயற்சி நடைபெற்றதாகவும் அவர் அந்தக்கூட்டத்தில் விரிவாகப் பேசினார்.
இக்கூட்டத்தில் கட்சியின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு, எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்தும் முன்னணி நிர்வாகிகள் மத்தியில் விவாதிக்கப்பட்டது.
தவெக மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அல்லது பதிலும் வெளியாகவில்லை.