“நடிகர் விஜய் சேதுபதிக்கு முழு ஆதரவு தருவோம்” - அதிமுக எம்பி இன்பதுரை அறிவிப்பு!
Sep 14, 2026, 17:40 IST
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்துகள் அரசியல் ரீதியாக விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜனநாயக நாட்டில் தனது கருத்துகளைத் தெரிவிக்க அவருக்கு முழு உரிமை உண்டு என அதிமுக எம்பி இன்பதுரை ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய விவகாரத்தில் தவெக மற்றும் விஜய் ரசிகர்களின் எதிர்ப்புகளுக்கு இடையில், ஜனநாயக நாட்டில் எவரும் தங்கள் கருத்துகளைத் சுதந்திரமாகப் பதிவு செய்ய முடியும் என இன்பதுரை தெளிவுபடுத்தியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக எழும் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு எதிராக, அவரது கருத்துரிமையைப் பாதுகாக்கும் வகையில் அதிமுக தரப்பில் இருந்து முழுமையான சட்டப்பூர்வ ஆதரவு வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.