"விரைவில் அதிமுக ஆட்சி அமையும்” - செல்லூர் ராஜு கடும் விமர்சனம்!

 

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான ஆட்சி விரைவில் கவிழும் என்றும், பிரதமர் மோடி சாட்டையைச் சுழற்றப் போவதால் விரைவில் மாநிலத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்லூர் ராஜு, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், தமிழக அரசு மற்றும் தவெக கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு அதிரடி விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தவெக கட்சியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தற்போது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காகவே முதல்வர் விஜய் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். உண்மையான மக்கள் நலப் பணிகளைச் செய்யாமல், வெறும் சமூக வலைதளங்கள் மற்றும் 'ரீல்ஸ்' மூலமாக மட்டுமே ஆட்சியை நடத்திவிடலாம் என்று தவெக அரசு நினைப்பதாகக் கிண்டல் செய்த அவர், இந்த ஆட்சி ஐந்தாண்டுகள் முழுமையாக நீடிக்காது என்றும் கணித்துள்ளார்.

தவெக ஆட்சிக்கு அதிமுக முன்பு வழங்கிய 6 மாத அவகாசக் காலம் தற்போது முடிவடைந்துவிட்டதாகவும், இனி மக்களின் உரிமைகளுக்காகவும் முறைகேடுகளைக் கண்டித்தும் அதிமுக சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். டெல்லியில் இருந்து பிரதமர் மோடி விரைவில் சாட்டையைச் சுழற்றப் போவதாகவும், அதன் மூலம் மாநிலத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு விரைவில் அதிமுக ஆட்சி மீண்டும் அமையும் என்றும் செல்லூர் ராஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.