undefined

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு.. அவசர அவசரமாக தரையிறங்கியது!

 

நடுவானில் பறந்துக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டது பயணிகளை பதற செய்துள்ளது. நல்வாய்ப்பாக அனைத்து பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, ரேம் ஏர் டர்பைன் பயன்படுத்தி விமானம் பர்மிங்காம் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பர்மிங்காமில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை விமான நிறுவனம் செய்தது.

பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?