undefined

மாஸ்க் இல்லாம வெளியே போகாதீங்க... தீபாவளிக்குப் பின் காற்று மாசு அதிகரிப்பு...   ! 

 

 

தில்லியில் தீபாவளி பண்டிகையின் போது அதிக அளவில் பட்டாசுகள் வெடித்ததையடுத்து, தலைநகரில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 20ம் தேதியிலிருந்து, 38 கண்காணிப்பு நிலையங்களில் 31-இல் காற்றுத் தரக் குறியீடு 300–400 புள்ளிகளுக்கிடையில் இருந்தது, இது 'மிகவும் மோசம்' பிரிவாகும். மேலும், 3 நிலையங்களில் 400க்கும் மேல் பதிவாகி, 'தீவிரம்' பிரிவில் இருந்தது.

தீபாவளிக்கு பின் இன்று (அக்.21) காலை 10 மணி நிலவரப்படி, தில்லியில் சராசரி காற்றுத் தரக் குறியீடு 359 ஆக பதிவாகி, காற்றின் தரம் இன்னும் 'மிகவும் மோசம்' பிரிவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வட்டாரங்களில் உள்ளோர் கடுமையான மாசு பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் நிலையில் உள்ளனர்.

மருத்துவர்கள், வீடுகளை விட்டு வெளியே செல்லும் பொழுது முகக் கவசம் அணிந்து கொள்ளவும், சுவாச பாதையில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளனர். காற்று மாசு அதிகரிப்பால் சுவாசம், கண்கள், தும்மல் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!