பரந்தூர் விமான நிலையம்... மாற்று இடங்கள் தேர்வு... முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிப்பு!

 

 

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக புதிய விமான நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதாகச் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்தார். அதேவேளையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பக்கமே தாம் உறுதியாக நிற்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

விவசாய நிலங்களும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாத வகையில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.