சென்னை விமான நிலையத்தில் 5-வது பயணிகள் முனையம்... முதல்வர் விஜய் அறிவிப்பு!
Aug 24, 2026, 11:22 IST
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து, அதன் வடமேற்குப் பகுதியில் 5-வது பயணிகள் முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
ஆண்டுக்குக் கூடுதலாக 20 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இந்த புதிய முனையம் அமைக்க விமான நிலைய அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
அரசின் இந்த புதிய அறிவிப்பின் மூலம் விமான பயணிகளின் வசதிகள் மேலும் மேம்படும் எனவும், போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.