விமான நிலையம் முதல் வங்கிகள் வரை... இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய புதிய விதிமுறைகள்!

 

இன்று (செப்டம்பர் 1) முதல் விமான நிலையங்கள், எரிபொருள் மற்றும் வங்கிச் சேவைகள் தொடர்பான பல புதிய முக்கிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. பொதுமக்களின் வசதியையும் வெளிப்படைத் தன்மையையும் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

  • விமானப் பயணம்: வெளிநாடு செல்லும் பயணிகள் விமான நிலையங்களில் உள்ள குடியுரிமை கவுன்டர்களில் இனி போர்டிங் பாஸில் முத்திரை பெற வேண்டிய அவசியம் இல்லை; மின்னணு அல்லது அச்சிடப்பட்ட போர்டிங் பாசைக் காட்டினாலே போதும்.

  • எல்.பி.ஜி சிலிண்டர்: சமையல் கியாஸ் இணைப்புகளுக்கு 'இ-கே.ஒய்.சி' (e-KYC) செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைச் செய்யாவிட்டால், வீட்டு உபயோக சிலிண்டரைச் சலுகை விலையில் பெற முடியாது.

  • வங்கி வைப்புத் தொகைகள்: ரூ. 3 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகித விவரங்களை வங்கிகள் தினமும் காலை 10.10 மணிக்குள் தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும். மேலும், ஒரே நாளில் ஒரே தொகைக்கான வைப்புத் தொகைக்கு நாட்டின் வெவ்வேறு கிளைகள் வெவ்வேறான வட்டி விகிதங்களை வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.