ஏமனில் வான்வழித் தாக்குதல்; 7 பேர் பலி; 40 பேர் படுகாயம்!
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசுப் படைகளுக்குமிடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், தைஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஏமனின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தைஸ் மாகாணம், அல்-தைசியா மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியச் சந்தைப் பகுதியை குறிவைத்து சவுதி தலைமையிலான கூட்டணிப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.
ஹவுதி ஊடகங்களின் தகவலின்படி, இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 7 பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தைப் பகுதியில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் இந்தத் தாக்குதலின் காரணமாக முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
ஏமன் விவகாரத்தில் சவுதி கூட்டணிக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்த வான்வழித் தாக்குதல் சர்வதேச அளவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.