லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் ரேஸ்.. நேரில் பார்க்க செல்லும் CM விஜய்!
தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், உலகளாவிய முதலீட்டாளர்களை நேரில் சந்தித்துப் பேசுவதற்காகவும் தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் வரும் செப்.10 முதல் 16 ம் தேதி வரை பிரிட்டன் நாட்டிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிரிட்டன் பயணத்தின் போது, லண்டனில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்து கொண்டு வலம்வரும் பிரபல திரைப்பட நடிகரும், தலைசிறந்த கார் பந்தய வீரருமான அஜித் குமாரின் போட்டியைக் முதல்வர் விஜய் நேரில் பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாக ஊடக வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் தகவல்கள் பரவி வருகின்றன.
முன்னதாக, தமிழக அரசால் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, அதற்கு நடிகர் அஜித் குமார் தமிழக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கும் தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தொழில்துறை பயணமாக லண்டன் செல்லும் முதல்வர் விஜய், அங்கு நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்று விளையாடும் அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கக்கூடும் என்ற இந்த எதிர்பார்ப்பு திரையுலக மற்றும் அரசியல் வட்டாரங்களில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.