அஜித் குமாரின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய், த்ரிஷா நேரில் அஞ்சலி!

 

 

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் நேற்று காலமானார். இந்தத் துயரமான செய்தி சினிமா உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் இருந்த நடிகர் அஜித் தனது தாயாரின் மறைவுச் செய்தியைக் கேட்டு உடனடியாகத் சென்னை திரும்பியுள்ளார்.

தாயாரை இழந்து வாடும் நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு  முதல்வரும்  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நேரில் சென்றுள்ளார். அங்கு மறைந்த மோகினி அம்மையாரின் உடலுக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்தியுள்ளார். மேலும் நடிகர் அஜித்திற்குத் தனது ஆறுதல்களையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

நடிகர் விஜய்யுடன் முன்னணி நடிகையான த்ரிஷாவும் அஜித்தின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்துள்ளார். அவரும் மறைந்த அம்மையாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்துத் தனது அஞ்சலியைச் செலுத்தியுள்ளார். திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்களும் அஜித்தின் தாயார் மறைவுக்குத் தொடர்ந்து தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.