அஜித்தின் ‘பில்லா-2’ வசனகர்த்தா... பிரபல எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் இரா. முருகன் காலமானார் - பிரபலங்கள் இரங்கல்!

 

தமிழ் நவீன இலக்கியத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது எள்ளல் நடையினாலும் தனித்துவமான படைப்புகளினாலும் முத்திரை பதித்த மூத்த எழுத்தாளர் இரா. முருகன் (74) உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.

'அரசூர் வம்சம்', 'மிளகு', 'விஸ்வரூபம்', 'மூன்று விரல்', 'அஞ்சாமை' போன்ற பல நாவல்களையும், ஏராளமான சிறுகதைத் தொகுப்புகளையும் படைத்துத் தமிழ் வாசகர்களின் மனதைக் கவர்ந்தவர். இவரது கதைகளுக்காகவும் நாவல்களுக்காகவும் புகழ்பெற்ற 'விஷ்ணுபுரம் விருது' உட்படப் பல இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இலக்கியத் துறையோடு மட்டுமல்லாமல் திரைப்படத் துறையிலும் தடம் பதித்த இவர், கமல்ஹாசன் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்' மற்றும் அஜித்குமார் நடித்த 'பில்லா 2' ஆகிய முக்கியத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

74 வயதில் மறைந்த மூத்த எழுத்தாளர் இரா. முருகன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும் வாசகர்களுக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், திரைத்துறையினர் மற்றும் தமிழ் வாசகர்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.