அஜித் ரசிகர்கள் புதிய கட்சி தொடக்கம்... 'தமிழக மக்கள் கழகம்' கொடி அறிமுகம்!
நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து 'தமிழக மக்கள் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளனர். மேலும், கட்சிக்கான புதிய கொடியையும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளனர்.
நடிகர் அஜித் ஏற்கனவே அரசியலுக்கு வர மாட்டேன் என்றும், தனக்கு எந்தவிதமான அரசியல் கட்சியோ அல்லது அரசியல் ஈடுபாடோ கிடையாது என்றும் பலமுறை தனது ரசிகர்களிடமும் பொதுவெளியிலும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், அவரது அரசியல் பிரவேகம் குறித்த விவாதங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் முதலமைச்சர் விஜய் லண்டன் சென்று, அஜித்தின் கார் பந்தய நிகழ்வைத் தொடங்கி வைத்த நிகழ்வும், அவர்களின் சந்திப்பும் அரசியல் அரங்கில் பெரும் பேசப்பொருளாக மாறியது.
இந்நிலையில் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர்கள் ஒன்றிணைந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கூடி, 'தமிழக மக்கள் கழகம்' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளனர். இந்நிகழ்வின்போது புதிய கட்சியைக் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.