பார்சிலோனா கார் ரேஸ் - அஜித்தின் ரேசிங் அணி 2-வது இடம் பிடித்து சாதனை!

 

திரைப்படங்களில் பிசியாக இருப்பதுடன், கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் கார் பந்தயங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் அஜித் குமாரின் அணி, வெளிநாடுகளில் தொடர்ச்சியாகச் சாதனை படைத்து வருகிறது.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற 24 மணி நேரக் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் சொந்தக் கார் பந்தய அணி உற்சாகத்துடன் கலந்துகொண்டது.

கடுமையான போட்டிகள் நிறைந்த இந்தப் பந்தயத்தில் அஜித்தின் அணி 'ஜிடி3 ஏஎம்' பிரிவில் இரண்டாவது இடத்தைக் கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளது. மேலும், ஒட்டுமொத்தப் பிரிவில் அந்த அணி 5-வது இடத்தைப் பிடித்தது.

தனது அணி பந்தயத்தில் இரண்டாவது இடம் பிடித்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக, நடிகர் அஜித் இந்திய தேசியக் கொடியை ஏந்தி தனது பெருமிதத்தையும் வெற்றியையும் வெளிப்படுத்தினார்.