தமிழகம் முழுவதும் 2.5 கோடி பேருக்கு அல்பெண்டசோல் மாத்திரை... குடற்புழு தொற்று தடுப்பு சிறப்பு முகாம்!
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சார்பில், மாநிலம் முழுவதும் நாளை ஆகஸ்ட் 10ம் தேதி, திங்கட்கிழமை குடற்புழு நீக்க சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த சிறப்பு முகாம்கள் மூலம் 1 வயது முதல் 19 வயது வரையிலான 2.06 கோடி சிறுவர்-சிறுமிகள் மற்றும் 20 முதல் 30 வயது வரையிலான 52.44 லட்சம் பெண்கள் என மொத்தம் 2.5 கோடிக்கும் அதிகமானோர் பயன்பெறவுள்ளனர்.
இவர்களுக்குக் குடற்புழுக்களை அழிக்கக்கூடிய 'அல்பெண்டசோல்' மாத்திரைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளன. பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் இம்மாத்திரைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
குழந்தைகள் மற்றும் பெண்களிடையே காணப்படும் ரத்தச்சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
நாளை இந்த மாத்திரையைப் பெறத் தவறவிட்டவர்களுக்காக, வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி மீண்டும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படும்.