உஷார்.. இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
வட கடலோர தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகப் பகுதிகள் வழியாகச் செல்லும் சுமார் 0.9 கி.மீ உயரத்திலான காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருச்சிராப்பள்ளி, நாமக்கல், தேனி, தென்காசி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.