“CM விஜய் நாற்காலியின் 4 கால்களுமே ஊழல் கால்கள் தான்” - பரந்தாமன் தாக்கு!

 

மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வைத்து, இடைத்தேர்தல்கள் மூலம் தனிப்பெரும்பான்மை பெற முதல்வர் விஜய் முயல்வதாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பரந்தாமன், முதல்வர் விஜய்யின் நாற்காலியில் உள்ள நான்கு கால்களுமே ஊழல் கால்கள்தான் என்று கடுமையாக விமர்சித்தார்.

மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில், முதல்வர் விஜய்யை முதல் குற்றவாளியாக சேர்த்து உடனடியாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆளுங்கட்சியின் பெரும்பான்மை பலத்தை உறுதி செய்வதற்காகத் திட்டமிட்டே எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தல்களைத் திணிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாளை  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், திமுக தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள இந்தக் கடுமையான குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.