"அனைவருக்கும் ஆல் தி பெஸ்ட் மா!" - மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட முதல்வர் விஜய்!
சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், புதிதாகத் தேர்வான அலுவலர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு விழாவில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் நேரில் வழங்கினார்.
தொழிற்தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மற்றும் மாநில அளவிலான திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார். சான்றிதழ் வழங்கிய பிறகு, விழா மேடையில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் முதலமைச்சர் விஜய் உற்சாகமாகக் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
நிகழ்வின் இறுதியில் மாணவர்களைப் பார்த்து, "அனைவருக்கும் ஆல் தி பெஸ்ட் மா!" என்று அன்புடனும் நெகிழ்ச்சியுடனும் கூறித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்ற மாணவர்களுக்கு நேரடியாகப் பணி நியமன ஆணைகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்ட இச்சம்பவம், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெருமகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.