ராகுல் காந்தி குடியுரிமை தொடர்பான வழக்கு தள்ளுபடி - அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரிட்டன் நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ராகுல் காந்தியிடம் பிரிட்டன் குடியுரிமை இருப்பதாகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில், மனுதாரர் தரப்பில் அதற்குரிய எந்தவிதமான ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் வழக்கைத் திரும்பப் பெற அனுமதி வழங்கிய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதே போன்ற குற்றச்சாட்டுகளுடன் கடந்த 2015 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளிலும் தாக்கல் செய்யப்பட்ட இதே போன்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை நீதிமன்றம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளது.