undefined

‘ரேவதியின் மரணத்திற்கும் அல்லு அர்ஜுனுக்கும் தொடர்பில்லை... வழக்கை வாபஸ் பெற தயார்...’ கணவர் பேட்டி!

 

‘எனது மனைவி ரேவதியின் மரணத்திற்கும் நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் வழக்கை வாபஸ் பெறவும் தயாராக இருக்கிறேன்’ என்று திரையரங்க கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இளம்பெண் ரேவதியின் கணவர் பேட்டியளித்துள்ளார்.

புஷ்பா படத்தின் சிறப்புக்காட்சியின் போது நடிகர் அல்லு அர்ஜுனைக் காண திரையரங்கில் ரசிகர்கள் முண்டியடித்ததில் நெரிசல் ஏற்பட்டு, கூட்ட நெரிசலில் சிக்கி இளம்பெண் ரேவதி உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த நடிகர் அல்லு அர்ஜுன், ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் 14 நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஜாமீன் ஆவணங்கள் சிறை அதிகாரிகளிடம் செல்லாததால் நேற்று இரவு முழுவதும் நடிகர் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்தார். இன்று காலை 7 மணிக்கு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதியின் கணவர் பாஸ்கர், தனது மனைவியின் மரணத்திற்கும் நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில், “என்னுடைய மனைவி கூட்ட நெரிசலில் உயிரிழந்ததற்கும் அல்லு அர்ஜுனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் உடனடியாக வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறேன் என்றார். 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!