தலைவா... வைரல் வீடியோ... அல்லு அர்ஜுன் வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் !
தென்னிந்தியா நடிகர்களில் முன்னணியில் இருந்து வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா திரைப்படத்தை ரசிகர்கள்கொண்டாடி தீர்த்தனர்.இப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து புஷ்பா 2 படம் தயாராகி வருகிறது. விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் இன்று தனது 42வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா தி ரைஸ் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 11.07 மணிக்கு வெளியாகிறது.
அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் அவரை சந்திக்க அவரது ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டனர்.அப்போது அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களை சந்திக்க வீட்டை விட்டு வெளியே வந்தார். பின்னர் அவர்களுக்கு நன்றி கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!