சாலையில் நடந்து சென்றவர் மீது பைக் மோதி  கீழே விழுந்த ஓட்டுநர் மீது அரசுப் பேருந்து ஏறி இறங்கி பலி!

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் கரட்டூரில் சாலையில் நடந்து சென்றவர் மீது பைக் மோதிய விபத்தில், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்த பைக் ஓட்டுநர் மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சைப் பதறவைக்கும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோபிசெட்டிப்பாளையம் கரட்டூர் பகுதியில் நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் (பைக்) எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பைக் ஓட்டுநரான நடராஜ் என்பவர் சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அதே நேரத்தில் அவரது பின்னால் வந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக கீழே கிடந்த நடராஜ் மீது ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த நடராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.