அமெரிக்காவில் வேலை இழப்பால் 2 மலையாளிப் பெண்கள் கொடூரக் கொலை!

 

 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 2  மலையாளிப் பெண்கள் உயிரிழந்த சம்பவம் அங்குள்ள இந்தியர்கள் மற்றும் சொந்த ஊரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில், அனிலா என்பவர் காரை ஏற்றி அஞ்சனாவைக் கொன்றதாகவும், பின்னர் ஆன்னி என்ற மற்றொரு பெண் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் வேலை இழந்ததால் ஏற்பட்ட கடுமையான மனச்சோர்வு காரணமாகவே அனிலா என்பவர் இந்த கொடூரச் செயலைச் செய்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே சம்பவத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பது இச்சம்பவத்தை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துக் கலிபோர்னியா காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தங்களது விசாரணையை விரிவுபடுத்தி வருகின்றனர்.