அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்க புதிய கட்டுப்பாடுகள் !
Sep 3, 2026, 17:43 IST
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2வது முறையாகப் பதவியேற்றது முதல் குடியேற்றம் மற்றும் விசா தொடர்பான விதிகளில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அந்த வகையில், தற்போது அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்பு குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறையின்படி, அமெரிக்காவில் பிறந்த குழந்தைக்குப் பாஸ்போர்ட் பெறும்போது பெற்றோர் தங்களது உறவை நிரூபிப்பதுடன் புகைப்பட அடையாள அட்டையைச் சமர்ப்பித்தால் போதுமானது. ஆனால், இந்தப் புதிய திட்டம் அமலுக்கு வந்தால், பெற்றோர் தங்களது அமெரிக்கக் குடியுரிமைக்கான ஆதாரத்தையும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும்.