தமிழகம் வந்தடைந்தார் அமித் ஷா... இன்று மயிலாப்பூரில் கபாலி, கற்பகம்மாள் தரிசனம்... தமிழிசைக்கு வாக்கு சேகரிப்பு!
பிரதமர் மோடி கோவை கொடிசியாவில் நேற்று அனல் பறக்க பொதுக்கூட்டத்தில் பேசி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்றிரவு கோவை வந்திருந்தார். இன்று காலை ஈரோடு மாவட்டத்தில் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து நேரடியாக சென்னை வருகிறார் அமித்ஷா.
சென்னை மயிலாப்பூரில் போட்டியிடும் தமிழிசையை ஆதரித்து இன்று அமித்ஷா பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மயிலாப்பூர் பகுதியில் வீதி வீதியாகச் சென்று தாமரை சின்னத்திற்கு அவர் வாக்கு சேகரிக்கிறார். முன்னதாக மயிலாப்பூரில், இன்று மாலை 4 மணியளவில் கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு தனது பிரசாரத்தைத் துவங்குகிறார் அமித்ஷா.
தமிழகத்தில் 4 முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சி இருப்பதால், அனைத்துக் கட்சிகளும் தங்கள் இறுதி கட்டப் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. அமித்ஷாவின் இந்த சென்னை வருகையானது தலைநகரில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.