தமிழகத்தில் NDA  ஆட்சி - அமித்ஷா சூளுரை!

 

தமிழகத்தில் வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

"தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். திமுக அரசுக்கு எதிரான அலை பலமாக வீசுகிறது. எனவே, இந்த முறை தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி. தமிழகத்தில் கூட்டணி அரசியலுக்கான தேவை உள்ளது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். எங்களது கூட்டணியின் மிகப்பெரிய மற்றும் பலமான கட்சியான அதிமுகவுடன் (AIADMK) இணைந்து நாங்கள் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்."

"பாஜக, அதிமுக மற்றும் சிறிய பிராந்திய கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு பலமான கூட்டணியாகத் தேர்தலைச் சந்திக்கிறோம். இந்தக் கூட்டணி தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும்.  ஏற்கனவே அதிமுக - பாஜக - பாமக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில், அமித்ஷாவின் இந்தப் பேச்சு தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 30ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், அமித்ஷா விரைவில் தமிழகத்திற்குப் பிரசாரத்திற்காக வருகை தர உள்ளார்.