திருவள்ளூர் அமோனியா கசிவு விபத்து.. பலியான 18 பேர் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
Aug 7, 2026, 06:10 IST
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் உள்ள மீன் பதப்படுத்தும் ஆலையில், திடீரென அமோனியா வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி 18 பேர் உயிரிழந்த வழக்கின் விசாரணையில், கைது செய்யப்பட்ட ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 3 பேருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆலை உரிமையாளர்கள் உட்படக் கைது செய்யப்பட்ட 3 நபர்களுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி, மனுதாரர்கள் அனைவரும் தினந்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளார்.