இல்லத்தரசிகள் ஷாக்... அமுல் பால் விலை உயர்வு... நாளை முதல் லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிப்பு!
இந்தியாவின் முன்னணி பால் நிறுவனமான அமுல், தனது பால் வகைகளின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த விலை மாற்றமானது மே 14 முதல் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகளைக் கருத்தில் கொண்டே இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பால் பவுடர்களின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே காய்கறி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் சிரமப்படும் மக்களுக்கு, பாலின் இந்த விலை உயர்வு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப நிறுவனங்கள் அவ்வப்போது விலையை மாற்றி அமைப்பது வழக்கமான ஒன்று என்றாலும், இது நுகர்வோர் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.