“பயனற்ற அமைப்பு; போர்களைத் தடுப்பதில் ஐ.நா. சபை தோற்றுவிட்டது” - அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலெய் விமர்சனம்!

 

நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலெய், உலகளாவிய போர்களையும் வன்முறைகளையும் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா. சபை முற்றிலும் தோற்றுவிட்டதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

நியூயார்க்கில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பேசிய அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலெய், சர்வதேச அளவில் நடக்கும் போர்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது வன்முறைகளைத் தவிர்க்கவோ ஐக்கிய நாடுகள் சபையால் முடியவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

உலக நாடுகளுக்குப் பாதுகாப்பு அளித்து அமைதியை நிலைநாட்ட வேண்டிய இவ்வமைப்பு, தங்களது அதிகார வர்க்கத்தையும் பதவியையும் தக்கவைப்பதிலேயே குறியாகச் செயல்பட்டு வருவதாக அவர் விளாசினார்.

தொடர் தோல்விகள் காரணமாக ஐ.நா. சபை தற்போது தனது பலத்தை இழந்து முற்றிலும் ஒரு பயனற்ற அமைப்பாக மாறிவிட்டதாகத் தெரிவித்த அவரது பேச்சு, சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.