“தமிழகத்தில் பெருகும் துப்பாக்கிக் கலாசாரம் ஆபத்தானது!” – அன்புமணி கண்டனம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாமக நிர்வாகி ஞானவேல் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் துப்பாக்கிக் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று அவர் எச்சரித்துள்ளார். துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் பூவரசனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை மீட்க அழைத்துச் சென்றபோது, காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகவும், இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் ஞானவேலுவுடன் இருந்த ரகு என்பவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்