காமராசர் காலை உணவுத் திட்டம் - தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!

 

காமராசர் காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழாவுக்கான செலவுகளைத் தலைமை ஆசிரியர்களே ஏற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

காமராசர் காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழா வரும் செப்டம்பர் 17ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இத்திட்டத்தின் தொடக்க விழாவிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே தங்களின் சொந்தச் செலவில் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அரசுத் திட்டங்களுக்குத் துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு செய்யாமல், ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை அரசு திணிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.