முன்னாள் காதலியின் மீது ஆத்திரம்... வினாத்தாள் கசிவை அம்பலப்படுத்திய இளைஞர்!
மகாராஷ்டிராவில் மருந்து ஆய்வாளர் பணிக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் மருந்து ஆய்வாளர் பணிக்கான தேர்வில் தனது முன்னாள் காதலி தேர்ச்சி பெற்றதை அறிந்த ராஜேந்திர படேல் என்ற இளைஞருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அப்பெண் தேர்வுக்கு முன்பே பணம் கொடுத்து வினாத்தீவைக் கசியவிட்டுத்தான் தேர்ச்சி பெற்றார் என்ற உண்மையை மகாராஷ்டிர தேர்வாணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி அம்பலப்படுத்தினார்.
இந்த மின்னஞ்சல் புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், குற்றச்சாட்டு உண்மையானது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, வினாத்தாள் கசிவுக்குக் காரணமாக இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் அந்தப் பெண்ணின் தந்தை உட்பட மொத்தம் 6 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.