ஒரே மேடையில்   முதல்வர் விஜய், ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த்... அனிருத், காவ்யா மாறன் திருமண வரவேற்பு!

 

 

பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளர் காவியா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணித் திரைப்பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குறிப்பாக, முதலமைச்சர் விஜய், மு.க.ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் ஒரே பிரேமில் புன்னகையுடன் சந்தித்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களின் இந்த அபூர்வ சங்கமம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது