‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக கரு.நாகராஜன் நியமனம் - அண்ணாமலை அறிவிப்பு!
‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராகக் கரு. நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் வளர்ச்சியையும், அதன் அமைப்பு ரீதியான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தோடும் கரு. நாகராஜன் இந்தப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் இயக்கத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்துதல், நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கியப் பணிகளை அவர் முன்னெடுத்துச் செல்வார்.
கரு. நாகராஜனின் நீண்டகால அரசியல் அனுபவம் மற்றும் அர்ப்பணிப்புத் தன்மையானது ‘வி த லீடர்ஸ்’ அமைப்பை மக்கள் மத்தியில் மேலும் விரிவுபடுத்தி வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள தலைவர் அண்ணாமலை, அவருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
அமைப்பின் கட்டமைப்பை ஒவ்வொரு நிலையிலும் வலுப்படுத்திடவும், கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்திடவும் நியமிக்கப்பட்டுள்ள கரு. நாகராஜனுக்கு அனைத்துத் தலைவர்களும், நிர்வாகிகளும், களப்பணியாளர்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.