சட்டமன்றம் மக்கள் பிரச்சனைகளைப் பேசும் மன்றமாக இருக்க வேண்டும் -  அண்ணாமலை வலியுறுத்தல்!

 

தமிழக சட்டமன்றம் தனிப்பட்ட விவாதங்களையும் பஞ்சாயத்துகளையும் தீர்க்கும் நாடக மன்றமாக மாறாமல், மக்களின் உண்மையான பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமாக விவாதிக்கும் இடமாகத் திகழ வேண்டும் என்று 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், சட்டமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கல்லூரிகளில் மாணவர் அரசியலை மீண்டும் ஊக்குவிப்பதன் மூலமாக மட்டுமே எதிர்காலத்திற்கான திறமையான இளம் தலைவர்களை உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

பெண்களைத் தவறாகவும் ஆபாசமாகவும் சித்தரிக்கும் திரைப்படங்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அதற்கேற்ப சென்சார் விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.