அண்ணாமலை பிரிட்டன் பயணம்,... லண்டன் கல்லூரியில் சிறப்பு உரை!

 

'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவரும் நிறுவனருமான அண்ணாமலை, வரும் செப்டம்பர் மாதம் பிரிட்டன் நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பிரிட்டனின் லண்டன் ஹவுன்ஸ்லோ பகுதியில் உள்ள கிரான்ஃபோர்ட் சமூகக் கல்லூரியில் வரும் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் சிறப்பு நிகழ்வில் அவர் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில், "பெண்களின் தொலைநோக்குப் பார்வையும் தலைமைத்துவமும் 2026"  என்ற தலைப்பின் கீழ் அண்ணாமலை சிறப்புரையாற்றவுள்ளார்.

பெண்களின் அதிகாரம் மற்றும் எதிர்காலத் தலைமைத்துவம் குறித்து சர்வதேச அரங்கில் அவர் உரையாற்றவுள்ளதால் இந்நிகழ்ச்சி பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.