ஆசிய விளையாட்டுப் போட்டி -  இந்திய அணியில் அன்னு ராணி உட்பட முக்கிய வீரர்கள் திடீர் நீக்கம்!

 

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில், நடப்புச் சாம்பியனான ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணி உள்ளிட்டோர் சமீபகால மோசமான செயல்பாடு மற்றும் உடல்தகுதிப் பிரச்சினை காரணமாக அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி அக்டோபர் 4-ம் தேதி வரை ஜப்பானின் அய்ச்சி மற்றும் நயோகா நகரங்களில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் 503 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆசிய போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற நடப்புச் சாம்பியனான ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணி, நீளம் தாண்டுதல் வீரர் ஷனவாஸ் கான் மற்றும் ஓட்டப்பந்தய வீராங்கனை நித்யா கந்தே ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக அவர்கள் வெளிப்படுத்திய மோசமான செயல்பாடு மற்றும் போதிய உடல்தகுதி இல்லாததே இந்த அதிரடி நீக்கத்திற்குக் முக்கியக் காரணமாகும். இப்போட்டியில் 36 விளையாட்டுப் பிரிவுகளில் களம் காணும் இந்திய அணியில் 269 வீரர்களும், 234 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.