undefined

வேற லெவல்.. முகமூடி கொள்ளையர்களை லெப்ட் ரைட் வாங்கிய முதியவர்..!

 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்பவான் ஓடை பகுதியை சேர்ந்தவர் வைரக்கண்ணு. 80 வயதான வைரக்கண்ணு அப்பகுதியில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். அவர் வீட்டை நோட்டம் விட்ட 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று இரவு முகமூடி அணிந்து வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

ஆனால் அவர்களை கண்டு அஞ்சாத வைரக்கண்ணு உடனே வீட்டில் தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து அவர்களை சரமாரியாக தாக்கவும், பயந்து போன முகமூடி கும்பல் தலைதெறிக்க தப்பி ஓடியுள்ளது. இந்த களேபரத்தில் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து விவரமறிந்து காவல்துறைக்கு தகவல் சொல்லியுள்ளனர்.

இந்நிலையில் 80 வயதிலும் கொள்ளை கும்பலை தனி ஆளாக ஓட விட்ட வைரக்கண்ணுவின் செயல் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.