அண்ணா பல்கலைக்கழகத்தில் டெங்கு காய்ச்சலால் மேலும் ஒரு மாணவி மருத்துவமனையில் அனுமதி!

 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணி காய்ச்சல் பரவிவரும் சூழலில், பாதிப்பு அறிகுறிகளுடன் மேலும் ஒரு மாணவி தீவிர மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணி காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நான்காம் ஆண்டு மாணவர் ஒருவர் காய்ச்சல் காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்குச் சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் பரிசோதனைகளின் முடிவில், கோவையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.