அந்தியூர் முன்னாள் பாமக எம்எல்ஏ ஆர். கிருஷ்ணன் காலமானார்!
Nov 9, 2026, 11:09 IST
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவருமான ஆர். கிருஷ்ணன் (74) உடல்நலக்குறைவால் காலமானார்.
கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அந்தியூர் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 2001 முதல் 2006 வரை எம்எல்ஏவாகப் பணியாற்றினார்.
அவரது மறைவுச் செய்தி அறிந்த அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு ஈரோடு மாவட்ட அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.