சென்னை, திருச்சி என கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... ஆதரவாளர்கள் குவிந்ததால் பரபரப்பு!

 

சென்னை மற்றும் திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும், திருச்சியிலும் ஒரே நேரத்தில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் தொடர்புடைய இடங்களில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சோதனைக்கான முழுமையான காரணம் மற்றும் இதுவரை கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.