தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவராக ஏ.பி.தமீம் அன்சாரி நியமனம்: இன்று புதிய பொறுப்பேற்பு!

 

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TAMCO) புதிய தலைவராக ஏ.பி.தமீம் அன்சாரி அவர்கள் தமிழக அரசின் அரசாணையின்படி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறுபான்மையின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகச் செயல்படும் இந்த முக்கிய அமைப்பின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் அடிப்படையில் அவருக்கான பொறுப்பேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.15 மணிக்குச் சென்னையில் உள்ள TAMCO தலைவர் அறையில் இதற்கான சிறப்பு நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளன. அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் (IAS) அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

அவர்களின் முன்னிலையில் ஏ.பி.தமீம் அன்சாரி அவர்கள் கழகத்தின் புதிய தலைவராகத் தனது அதிகாரப்பூர்வப் பொறுப்புகளை இன்று ஏற்றுக்கொள்கிறார்.சிறுபான்மையின மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும் அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தடுவதிலும் இந்த மேம்பாட்டுக் கழகம் மிக முக்கியப் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும். புதிய தலைவராகப் பொறுப்பேற்கும் ஏ.பி.தமீம் அன்சாரி அவர்களின் சேவையால் இந்த அமைப்பு மேலும் பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.