இந்தியாவில் Apple Pay அறிமுகம்! iPhone-ல் எப்படி பணம் செலுத்துவது? முழு தகவல்கள்!

 

 

ஆப்பிள் நிறுவனம் தனது Apple Pay பணப்பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் iPhone, iPad மற்றும் Apple Watch பயன்படுத்தும் இந்திய வாடிக்கையாளர்கள், தகுதியான கிரெடிட் கார்டுகளை Apple Wallet-ல் இணைத்து கடைகளிலும் ஆன்லைனிலும் பணம் செலுத்த முடியும். Mac-க்கான ஆதரவு விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் Apple Pay சேவையில் Axis Bank வழங்கும் Visa மற்றும் Mastercard கிரெடிட் கார்டுகள் மட்டுமே இணைக்க முடியும். இந்தியாவின் உள்நாட்டு RuPay கார்டுகளுக்கு தற்போது Apple Pay ஆதரவு வழங்கப்படவில்லை.Apple Pay-ஐ பயன்படுத்த முதலில் உங்கள் iPhone-ல் உள்ள Wallet செயலியை திறக்க வேண்டும். அதில் '+' குறியீட்டை அழுத்தி, தகுதியான கார்டை சேர்ப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். Axis Bank-ன் சமீபத்திய செயலி மூலமாகவும் கார்டை நேரடியாக Apple Wallet-ல் சேர்க்க முடியும்.

கார்டை இணைத்த பிறகு, NFC வசதி கொண்ட கடைகளில் iPhone மூலம் தொடர்பில்லா முறையில் பணம் செலுத்தலாம். பணம் செலுத்தும்போது Face ID, Touch ID அல்லது சாதனத்தின் passcode மூலம் அங்கீகரிக்க முடியும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கார்டு PIN அல்லது OTP-ஐ தனியாக உள்ளிட வேண்டிய அவசியம் இல்லை.

ஆன்லைன் விற்பனை தளங்கள் மற்றும் Apple Pay-ஐ ஏற்றுக்கொள்ளும் செயலிகளிலும் இதன் மூலம் பணம் செலுத்த முடியும். இதனால் ஒவ்வொரு முறையும் கார்டு எண்ணை உள்ளிட வேண்டிய தேவையும் குறைகிறது.Apple Pay-ல் பாதுகாப்புக்காக பயனரின் உண்மையான கார்டு எண் சாதனத்திலோ Apple நிறுவனத்தின் சேவையகங்களிலோ சேமிக்கப்படாது. அதற்கு பதிலாக தனித்துவமான Device Account Number பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தகவல் சாதனத்தில் உள்ள பாதுகாப்பான Secure Element பகுதியில் சேமிக்கப்படுகிறது.

மேலும், Apple Pay மூலம் பணம் செலுத்தினாலும், சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்டில் கிடைக்கும் வழக்கமான rewards மற்றும் benefits தொடர்ந்து கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் ஏற்கெனவே UPI மிகப்பெரிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையாக இருக்கும் நிலையில், Apple Pay அறிமுகம் ஆப்பிள் பயனர்களுக்கு மற்றொரு contactless payment option-ஐ வழங்கியுள்ளது.