அக்வான் புயல் எதிரொலி: இலங்கைக்கு சிவகங்கை கப்பல் சேவை தற்காலிக ரத்து!
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'அக்வான்' புயல் காரணமாக, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் புயல் வலுப்பெற்று வருவதால் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் சீற்றமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடலில் பயணிப்பது பாதுகாப்பற்றதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதையடுத்து, பயணிகள் மற்றும் கப்பல் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சிவகங்கை கப்பல் சேவையை தற்காலிகமாக நிறுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புயல் கரையைக் கடந்து, கடல் மற்றும் வானிலை நிலவரம் சீரடைந்த பின்னர் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. சேவை மீண்டும் தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.