ஏ.ஆர்.ரஹ்மான் மகன் சென்ற கார் விபத்து... லேசான காயங்களுடன் தப்பினர்!
Aug 10, 2026, 08:18 IST
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பயணித்த கார் விபத்தில் சிக்கியது.
கோயம்பேட்டில் இருந்து ஏ.ஆர்.அமீன் தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே எதிரே வந்த மற்றொரு கார் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஏ.ஆர்.அமீன் மற்றும் அவருடன் பயணித்த நண்பர் உள்ளிட்ட அனைவருக்கும் அதிர்ஷ்டவசமாகப் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் லேசான காயங்களுடன் தப்பினர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்துக் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவுப் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.