27 கோயில்களில் அறங்காவலர் நியமனம்... தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 27 முக்கியத் திருக்கோயில்களுக்குப் பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். முதலமைச்சர் விஜய் அவர்களின் நல்லாட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் வழிகாட்டுதலின்படி இந்த முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நிர்வாகத் திட்டத்தின் கீழ் தகுதியும் ஆன்மிக ஈடுபாடும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் முறைப்படி வரவேற்கப்படுகின்றன. இந்த நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் துறை நிர்வாகம் முறைப்படி வெளியிட்டுள்ளது.
இந்த அறங்காவலர் நியமனம் செய்யப்படவுள்ள 27 திருக்கோயில்களின் முழு விவரங்கள், தகுதிகள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் www.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்திற்குச் சென்று தேவையான விவரங்களைத் தெளிவாகப் படித்து அறிந்துகொள்ளலாம். திருக்கோயிலுக்கென பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட நிர்வாகத் திட்ட விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியான நபர்களை வெளிப்படையான முறையில் தேர்வு செய்ய அரசு முழு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களின் விண்ணப்பங்களை இணைய வழியிலேயே முழுமையாகப் பூர்த்தி செய்து நேரடியாகச் சமர்ப்பிக்கலாம். அல்லது படிவத்தைப் பதிவிறக்கம் செய்து உரிய சான்றுகளுடன் பூர்த்தி செய்து நேரிலோ அல்லது விரைவஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலக முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை 5.45 மணி வரை இறுதி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அறங்காவலர் நியமிக்கப்பட உள்ள கோவில்களின் பட்டியல் :
அறங்காவலர்கள் நியமிக்கப்படவுள்ள 29 திருக்கோயில்களின் விவரம்
சென்னை, திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்,
மயிலாப்பூர், அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில்,
திருவல்லிக்கேணி, அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோயில்,
பெரியமேடு, அருள்மிகு எல்லம்மன் திருக்கோயில்,
சூளை, அருள்மிகு அங்காளபரமேஸ்வரி மற்றும் காசிவிசுவநாத சுவாமி திருக்கோயில்,
ஓட்டேரி, அருள்மிகு செல்லபிள்ளைராயர் திருக்கோயில்,
தங்கசாலை தெரு, அருள்மிகு செங்ழுநீர் பிள்ளையார் மற்றும் கோலூரம்மன் திருக்கோயில்,
வில்லிவாக்கம், அருள்மிகு சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயில்,
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், அனுமந்தராய சுவாமி திருக்கோயில், இடுகம்பாளையம், அருள்மிகு
கோவை மாவட்டம், ரங்கவுடர்வீதி, சௌடேஸ்வரியம்மன் திருக்கோயில், அருள்மிகு புதுராமலிங்க
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருள்மிகு புத்துமாரியம்மன் திருக்கோயில்,
திண்டுக்கல் மாவட்டம், அருள்மிகு செங்குந்தர் காளியம்மன் திருக்கோயில்,
திண்டுக்கல் மாவட்டம், அருள்மிகு செங்குந்தர் காளியம்மன் திருக்கோயில்,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்,
ஈரோடு மாவட்டம், சூரம்பட்டிவலசு, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
நாமக்கல் மாவட்டம், கோரக்குட்டை, இறையமங்கலம், அருள்மிகு இளைய பெருமாள் (எ) வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில்,
காஞ்சிபுரம் மாவட்டம், குமரக்கோட்டம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
காஞ்சிபுரம் மாவட்டம், இளையனார்வேலூர், அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
செங்கல்பட்டு, அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்,
மதுரை மாவட்டம். புட்டுத்தோப்பு. அருள்மிகு புட்டுஉற்சவ வகையறா திருக்கோயில்,
மயிலாடுதுறை திருக்கோயில், மாவட்டம். கும்பகோணம், அருள்மிகு சாரங்கபாணி
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம், அருள்மிகு திருக்கோயில், இராமநாதசுவாமி
சிவகங்கை மாவட்டம், அரியாக்குறிச்சி, அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில்,
சிவகங்கை மாவட்டம், மடப்புரம். அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்ன் திருக்கோயில்,
தஞ்சாவூர் மாவட்டம். பூக்காரத் தெரு. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில்,
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தமல்லி, அருள்மிகு திருகச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் திருக்கோயில்,
திருவள்ளூர், அருள்மிகு ஜெகன்னாதப் பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோயில்.