நக்சலைட் மகள் சிவில் இன்ஜினியராகி சாதனை - வறுமையை வென்ற அரவிந்தாவின் உத்வேகம் தரும் கதை!

 

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் அரவிந்தா, பல்வேறு குடும்பச் சோதனைகளையும் வறுமையையும் கடந்து சிவில் இன்ஜினியர் பட்டயம் பெற்று தற்போது நிறுவனப் பணியில் இணைந்துள்ளார்.

அரவிந்தாவின் தந்தை ராஜ்பாபு பர்சாகடே கடந்த 2005-ல் நக்சலைட் அமைப்பில் இணைந்ததால் குடும்பம் பெரும் துயரத்தைச் சந்தித்தது. அவரது தாயார் லதா, கணவனைத் தேட்டுக் குழந்தையுடன் காடுகளுக்குள் அலைந்து பல இன்னல்களை எதிர்கொண்டார்; பின்னர் 2010-ல் ராஜ்பாபு போலீசில் சரணடைந்து சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பினார்.

சாலை மற்றும் மின்சார வசதிகள் கூட இல்லாத பின்தங்கிய கிராமத்தில் வளர்ந்த அரவிந்தா, தனது தாயின் உழைப்பையும் கஷ்டங்களையும் பார்த்துப் படித்து வளர்ந்தார். வறுமை வாட்டிய போதும் விடாமுய}>{சியைக் கைவிடாமல் போராடி சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.

படித்து முடித்த அவர், தற்போது 'லாயிட்ஸ் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜி' நிறுவனத்தில் பயிற்சி இன்ஜினியராகப் பணியில் சேர்ந்துள்ளார். மேலும், வேலையுடன் சேர்த்துத் தொடர்ந்து பி.டெக் உயர் கல்வி பயில்வதே தனது லட்சியம் என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தில் இருந்து வந்த கட்சிரோலி மாவட்டம், கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் நக்சலைட்டுகள் இல்லாத மாவட்டமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.